53-04-05S போய் என் சீஷர்களுக்குச் சொல்லுங்கள்
[00:31.00] para 1
1.உண்மையாகவே இந்த அதிகாலையில் தேவனுடைய வீட்டிற்கு வந்து,
நம்முடைய உயிர்த்தெழுந்த கிறிஸ்துவாகிய நம்முடைய கர்த்தரை
ஆராதிப்பது என்பது ஒரு சிலாக்கியமாகவே உள்ளது. ஓ,…சற்று முன் நான் உள்ளே வந்தேன்.
கடந்த இரவு நமக்கு ஒரு அற்புதமான ஊழியர் கூட்டம் இருந்தது, திரளான கூட்டம்,
உண்மையாகவே நள்ளிரவு மட்டுமாய் நன்றாய் பிரசங்கித்தேன்.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஆராதிக்க இந்த காலையில் வந்துள்ளோம்.
சந்திக்கும்படியாய் ஒன்று சேர்ந்து வருவது எவ்வளவு அற்புதமாய் உள்ளது!
[00:59.00]
para2
2.சகோதரன் தாம் (Thom) கூறிக்கொண்டு இருந்தது போல,
அவர் யாரென்று அவர் நிரூபித்தது இன்றைய தினத்தன்றுதான். யார் வேண்டுமானாலும் மரிக்கலாம்.
ஆனால் மீண்டும் உயிரோடு எழும்புவதென்றால் அது தேவனால்தான் ஆகும்.
அவருடைய ஜீவியத்தில் அவர் தேவனைப் போன்று காணப்பட்டார். அவர் தேவனைப் போன்று பிரசங்கித்தார்,
அவர் தேவனைப் போன்று சுகப்படுத்தினார், அவர் தேவனைப் போன்று நடந்து கொண்டார். அவர் தேவனாய் இருந்தார்.
ஈஸ்டர் காலையன்று அவர் தேவனாய் இருந்தார் என்பதை அவர் நிரூபித்தார்.
அவர் ஒரு மனிதனை காட்டிலும் மேலானவராய் இருந்தார்.
அவர் ஒரு தீர்க்கதரிசியல்ல, இருந்த போதிலும் அவர் ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தார்.
அவர் ஒரு நல்ல மனிதனாய் இருந்தார். ஆனால் இருந்தபோதிலும் அவர் ஒரு நல்ல
மனிதனைக் காட்டிலும் மேலானவராய் இருந்தார். அவர் தேவனாய் இருந்தார். எனவே இது
அவர் அதை நிரூபித்த அவருடைய உயிர்த்தெழுதலின் நினைவுகூறும் நாளாய் உள்ளது.
[01:47.00]
para 3
3.இன்று காலையில் நாம் ஒரு பிரயாணமாக கங்கை
நதி ஓரமாக தொடர்ந்து போக வேண்டும். தாய்மார்கள் அவர்களுடைய
சிறு குழந்தைகளை பெரிய முதலைகளுக்கு தியாக பலியாய் தூக்கி
அவர்களை எறிவதை நீங்கள் அங்கே காணலாம். நீங்கள் உத்தமத்தைக்
குறித்துப் பேசுகிறீர்களா? அவர்கள் தங்களுடைய சிறிய கொழுமையான பிள்ளைகளை
அங்கே முதலைகள் நசுக்கும்படியாக அவர்களை தூக்கி எறிகிறார்கள்.
அது ஆழமான உத்தமம்.
[02:08.00]
para 4
4 நாம் இந்தியாவினூடாகச் சென்றால், இன்றைக்கு நீங்கள்
வீதிகளின் ஓரங்களில் நெடுக ஜனங்கள் ஆணிகளின் மேல் படுத்துக்கிடப்பதையும்,
அக்கினியினூடாக நடப்பதையும், ஏதாவது ஒரு விதத்தில் அவர்கள்
தங்களையே வேதனைப்படுத்திக் கொள்வதையும் காணலாம்.
அவர்களில் சிலர் உண்மையாகவே கோமாளித்தனம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏனென்றால் அது சுற்றுலா வருகிறவர்களுக்காகவே.
ஆனால் அங்கே தீவுகளில் உண்மையான மனிதன் அவ்விதமாக அங்கே பின்னாக படுத்துக்கொண்டும்,
தன்னையே வருத்திக் கொண்டும், அவன் இளைப்பாறுதலையும்,
சமாதானத்தையும் முகம்மது நபியிடம் ஜெபித்து—ஜெபித்து கண்டடைய முடியும் என்று நினைக்கிறான்.
[02:43.00]
para 5
5.அன்றொரு நாள் கொல்கத்தாவிற்கு போய்க் கொண்டிருக்கையில்,
இன்னுஞ் சரியாகக் கூறினால், எருசலேம் பட்டணத்திற்குப் புறம்பாக
ஒரு பரிதாபமான காட்சி, சரியாக சிலுவையில் அறையப்பட்ட அதே இடத்தில்,
ஒரு முகமதிய கல்லறையின் முற்றத்தில் அவள் வைத்திருந்ததான ஒரு கட்டு காட்டுச்செடிகளின்
கீழே ஒரு துண்டு பழைய கறுப்பு ரொட்டியுடன் அவள் அங்கே கிடத்தப்பட்டிருந்தாள்.
அவள் அங்கே அநேக நாட்களாக படுத்துக்கிடந்து, அவளுக்குப் பிரியமாயிருந்து
கடந்து போனவருடைய ஆத்துமாவிற்காக அழுதுகொண்டிருந்தாள்;
சரியாக சிலுவை நின்ற அதே இடத்தில் இருந்தாள். எனவே காண்பதற்கு
உலகம் எவ்வளவு அதனுடைய அஞ்ஞான நிலையில் இருக்கிறது!
[03:17.00]
para 6
6.சீனாவிலிருந்து திரும்பி வந்த சகோதரன் கேடஸ் (Gadus) அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
அவர், “சகோதரன் பிரான்ஹாம் சீனாவிலே பார்ப்பதற்கு அது ஒரு பரிதாபமான காட்சியாயிருந்தது” என்றார்.
தொடர்ந்து, “அவர்களில் சிலர் ஒருக்கால் ஒரே நேரத்தில் நாற்பது வருடங்களாக
அவர்களுடைய கரங்களை உயர்த்திக்கொண்டேயிருக்க, அவர்களுடைய நகங்கள் அவர்களுடைய
கைகளின் ஊடாகவே வளர்ந்து கொண்டுபோய் பின்பக்கமாக துருத்திக் கொண்டு வரலாம்.
‘மத்தான புத்தரே, நீர் என் ஆத்துமாவிற்கு சமாதானத்தைக் கொடுக்கும் வரை
நான் என் கரத்தை ஒருபோதும் அசைக்கவே மாட்டேன்’ என்று கூறுகிறார்கள்” என்றார்.
[03:51.00]
para 7
7.பின்னர், சிறுபிள்ளைகளில் அநேகர், அவர்கள் வாலிபமாய் இருக்கும்பொழுது,
அவர்கள் அவர்களுடைய பாதத்தின் வளைவில் இந்தவிதமாய்,
உடைத்துக்கொண்டு சுமார் இரண்டு அல்லது மூன்று அங்குல காலணியை மட்டுமே,
தங்களுடைய ஜீவிய காலமெல்லாம் அணிகிறார்கள். சிறிய குட்டையான பாதம்,
ஏனென்றால் அவர்கள் ஏதோ அஞ்ஞான தேவனுக்கு தியாகபலி செலுத்திக் கொண்டிருக்கிறார்களாம்.
[04:11.00]
para 8
8.ஒரு மார்க்கத்தை ஸ்தாபித்தவர்களுடைய கல்லறைகள் எல்லாவற்றிற்கும்
பெரும்பாலும் நான் விஜயம் செய்திருக்கிறேன். முகம்மது, புத்தர்,
கம்பூசியஸ் மற்றும் அநேக தத்துவஞானிகளின் கல்லறைகளுக்கும் கூட விஜயம் செய்திருக்கிறேன்.
[04:23.00]
para 9
9.ஆனால், இன்றைக்கு எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்தவ ஜனங்களாகிய
நம்மால் தலைகளை பின்னாகத் தள்ளி, “அவர் ஜீவிக்கிறார், அவர் ஜீவிக்கிறார்,
கிறிஸ்து இயேசு இன்றைக்கும் ஜீவிக்கிறார். அவர் ஜீவிக்கிறார் என்று எப்படி
நான் அறிவேன் என்று நீங்கள் என்னை கேட்கலாம்; அவர் என் இருதயத்தில் ஜீவிக்கிறார்”
என்று பாடமுடியும். இன்றைக்கு நமக்கு ஒரு காலியான கல்லறை உண்டு.
[04:44.00]
para 10
10.சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒருநாள் அதிகாலையில் நான்
என் சிறுபையனின் கடந்துபோன தாயாருக்கும், அவளுடைய கரங்களின்
மேலிருந்த அவனுடைய சிறிய சகோதரிக்கும் கல்லறையின் மேல் ஒரு
மலரை வைக்கும்படியாக வால்நட் ரிட்ஜ் (walnut Ridge) கல்லறை மைதானத்திலிருந்து
கல்லறைக்கு போய்க் கொண்டிருந்தேன். ஒரு சிறிய பூங்குவளையை கொண்டு
போய்க்கொண்டிருக்கையில், அவன் இரண்டு அல்லது மூன்று முறை அழுது,
அந்த சிறுவன் வாயடைத்துக் கொண்டான். நாங்கள் அங்கே முழங்காற்படியிட்டு,
எங்களுடைய தொப்பிகளை கழற்றி, அவைகளை கல்லறையின் மேல்,
கல்லறையின் பக்கமாக வைத்தோம். நான் என்னுடைய கரத்தை உயர்த்தி,
என்னுடைய புயங்களை அவனைச் சுற்றிப் போட்டுக் கொண்டேன்.